Saturday, April 10, 2010

ஊர்வலம்

நீ பறிக்கும் போது
மலர்கள் கூட சந்தோஷமாய் இறக்கும்
அதன் இறுதி ஊர்வலம்
உன் கூந்தலில் என்பதால்.

Sunday, March 7, 2010

என் கல்லறையில் ஒரு சொட்டாவது கண்ணீர் விடு
அதில் நான் மீண்டும் உயிர்த்தெழுவேன்
உன் கண்ணீர் துடைக்க.


**தலைப்பு என்ன வைப்பதென்று தெரியவில்லை.
உணர்வு புரிந்தால் நீங்களே சொல்லுங்கள்.**

Wednesday, January 20, 2010

தாயைப் பிரிந்து..

கருவில் இருந்தேன் உன்னோடு
என் உயிரில் இருந்தாய் நீ என்னோடு
இப்போது பிரிந்து செல்கிறேன் உன் நினைவோடு
உழைத்து உன்னைக் காப்பேன் என்ற கனவோடு
மீண்டுமொரு விடுமுறை நாள் வரும்
நான் தூங்க அவளின் மடியோடு.

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...