கரியாய் போனாலும் கரைவது இல்லை
புதைந்து போனாலும் சிதைவது இல்லை
பொறுமை என்னும் ஆயுதம் கொண்டு
வைரமாய் வளர்வோம் வைராக்கியம் கொண்டு
அழிவே இல்லை ஆத்மாவிற்கு
இழிவே இல்லை இந்தியனுக்கு..
காற்றாய் பறப்போம் கவலை வேண்டாம்
மேகத்தை முட்டி மழையாய் வருவோம்
உயிரை விடவும் மானம் பெரிதே
என்று வாழும் உயிர்கள் இங்கே
தெய்வம், கோயில் ஆயிரம் உண்டு
உயர்ந்து நிற்கும் மலைகள் உண்டு
அதில் பாய்ந்தோடும் நதிகள் உண்டு
மழை தரும் மரங்கள் கண்டு
அதில் கூடு கட்டும் தேனீ வண்டு..
கண்ணைப் பார்த்து பேசாப் பெண்கள்
கண்ணை அன்றி பார்க்கா ஆண்கள்
கர்ப்பின் அர்த்தம் கருவில் கற்றோம்
ரத்த உடையில்தான் உலகை பார்த்தோம்
பொம்மைக்கும் உடை அணியும்
பெருமை வாய்ந்த இனம்தான் நாங்கள்..
புதைந்து போனாலும் சிதைவது இல்லை
பொறுமை என்னும் ஆயுதம் கொண்டு
வைரமாய் வளர்வோம் வைராக்கியம் கொண்டு
அழிவே இல்லை ஆத்மாவிற்கு
இழிவே இல்லை இந்தியனுக்கு..
காற்றாய் பறப்போம் கவலை வேண்டாம்
மேகத்தை முட்டி மழையாய் வருவோம்
உயிரை விடவும் மானம் பெரிதே
என்று வாழும் உயிர்கள் இங்கே
தெய்வம், கோயில் ஆயிரம் உண்டு
உயர்ந்து நிற்கும் மலைகள் உண்டு
அதில் பாய்ந்தோடும் நதிகள் உண்டு
மழை தரும் மரங்கள் கண்டு
அதில் கூடு கட்டும் தேனீ வண்டு..
கண்ணைப் பார்த்து பேசாப் பெண்கள்
கண்ணை அன்றி பார்க்கா ஆண்கள்
கர்ப்பின் அர்த்தம் கருவில் கற்றோம்
ரத்த உடையில்தான் உலகை பார்த்தோம்
பொம்மைக்கும் உடை அணியும்
பெருமை வாய்ந்த இனம்தான் நாங்கள்..