Friday, June 1, 2012

செம்மொழி - எங்கள் தமிழ் மொழி.

தமிழில் எழுத ஆசைதான்
என் தாய்த் தமிழில் எழுத ஆசைதான்;
பட்டப் படிப்பு அனைத்தையும்
தாய்த் தமிழில் படிக்க ஆசைதான்

தாய் மொழியில் அறிவைப் பெற்று
தலை நிமிர்ந்து வாழ்வதை விட்டு
அந்நிய மொழியால் அவஸ்தைப் பட்டு
வாழ்கிறோம் நித்தம் அறிவும் கெட்டு


ஈராறு உயிர்கள் தமிழில் இருக்க
என் உயிர் முழுதும் அதன் மேல் இருக்கும்;
பதினெட்டு மெய்கள் உயிரோடு சேரும்
என் மெய் முழுதும் அதை போற்றிப் பாடும்;

வளைவு நெளிவு உள்ளதால்
தமிழும் பெண்ணும் ஒன்றுதான்;
அதனைப் படித்து உயர்கிறேன்
வாழ்நாள் என்றும் நன்றுதான்.

வள்ளுவர் தந்த திருக்குறள்,
பாரதி கண்ட புதுமைகள்,
அனைத்தும் தமிழில் இருந்திட
எவரும் உண்டோ படித்திட??

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...