Saturday, December 8, 2012

கிளிப்பிள்ளை

உன்னைக் காண்பேனென்று நான்
நினைக்கவில்லை;
உன் மேல் வந்தக் காதலைத்
தடுக்கவில்லை;
அதைப் பொத்தி வைக்கப்
பொறுமை இல்லை;
அதை உன்னிடம் சொல்லத்
தைரியமும் இல்லை;
இதை நான்,
சொல்லாமல் புரிஞ்சுக்கோடி
என் கிளிப்பிள்ளை..

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...