இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று வழக்கம் போல் கோவிலுக்கு சென்றேன்.
இதற்கு முன்பு கண்டிராத புது விஷயங்களை கண்டு வியந்தேன். இல்லை இல்லை. வருந்தினேன்.
அன்று கோவிலுக்குள் நின்றதில் 90 சதவீதம் பேர் சாமி கும்பிடுவதை விட தனது செல் போனில் அலங்கரித்த விநாயகர் சிலையை படம் பிடிப்பதிலே குறியாய் இருந்தனர்.
இவர்களாவது பரவாயில்லை.. எனக்கு முன் நின்ற ஒருவன் என்னை நோக்கி திரும்பி அவன் செல் போனை என்னை நோக்கி திருப்பி ஒரு க்ளிக் செய்தான். நான் குழம்பினேன், யார் என்றே தெரியாத ஒருவன் என்னை ஏன் படம் பிடிக்க வேண்டும் என்று. 2-3 வினாடிகளில் கழித்துதான் புரிந்தது அவன் க்ளிக் செய்தது என்னை அல்ல, அங்கே அலங்கரித்திருந்த விநாயகர் சிலையை. தற்போதைய நாகரிக வார்த்தைகளில் சொன்னால் "Selfie with Statue" என்றே சொல்லலாம்.
இன்று பெரும்பாலான மக்கள் கோவில் வழிபாட்டின் முறை தெரியாமல், எதற்காக கோவிலுக்கு செல்கிறோம் என்ற காரணம் கூட தெரியாமல் கோவிலுக்கு வருவது தான் மிகப் பெரிய வருத்தம். காரணம் தெரியக் கூடத் தேவையில்லை, ஆனால் கோவில் வழிபாட்டின் முறைகளையாவது பின்பற்றி இருக்கலாம்.
நம் தாத்தா பாட்டி அப்பா அம்மா அனைவரும் கோவிலுக்குள் வந்தால் சத்தமாக கூட பேச மாட்டார்கள். வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் மனதை ஒரு நிலைப்படுத்தி பிரார்த்தனை செய்வார்கள். கடவுள் அருளோ அல்லது அறிவியல் காரணமோ, ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் மனம் அமைதிப்படும்.
நாத்திகன் கோவிலுக்குள் செல்வதில்லை. அவன் தனது 'கடவுள் இல்லை என்ற' நம்பிக்கையிலாவது உறுதியாய் இருக்கிறான்.. அவன் நம்பிக்கையை அவன் அலட்சியம் செய்வதில்லை. ஆனால் ஆத்திகம் பேசும் மக்கள் இன்று கோவிலுக்குள் வந்து 'Selfie' எடுப்பதிலே கவனம் இருந்தால் அவர்கள் கோவில் வர அவசியம் தான் என்ன? மனம் ஒரு நிலைப் படாது, அவர் பக்தியும் கேள்விக் குறியாய் ஆகி விடுகிறது, மற்றவர்களுக்கும் இடைஞ்சல். கோவில் சிலையையும் காட்சிப் பொருளாய் ஆக்கி விடுகிறான்.
இப்படி பக்தர் என்ற பெயரில் வழிபாட்டை அலட்சியம் செய்யும் இவர்களை விட நாத்திகனாக இருப்பவர்கள் எவ்வளவோ மேல் என்று தோன்றியது.