உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல
தமிழும் இங்கே திணறுதடி
உன் இதழை மெல்ல வருடிச்சென்ற
காற்றும் வழியை மறக்குதடி ..
நீ சோம்பல் முறிக்கும் அழகைக்காண
சூரியன் தினமும் உதிக்குதடி
உன் கூந்தல் வாசம் நுகரத்தானே
பூக்கள் யாவும் மலருதடி ..
குளித்து நிற்கும் உன்னைப் பார்த்து
கண்ணாடி வெட்கி நெளியுதடி
பழித்துச் சொல்ல ஏதும் இல்லை
குணமோ சொக்கத் தங்கமடி ..
இயற்கை யாவும் தானம் கேட்கும்
உன் அழகில் கொஞ்சம் தா என்று
அடியேன் நானும் அடைய வந்தேன்
உன் நெஞ்சில் தஞ்சம், வா இன்று ..