Wednesday, September 24, 2008

குழந்தைத் தொழிலாளர்கள்..



கல்வி கற்கும் வேலையை விட்டுவிட்டு
வேலையே கற்கும் பரிதாபம்..
வீட்டில் அடுப்பு எரிய
தீக்குச்சியாய் பயன்படும் சிறுவர்கள்..
இரும்பாய் இருப்பது பெற்றவர்கள் நெஞ்சம் என்றாலும்
துரு பிடிப்பது இந்த அரும்பு பிஞ்சுகள் தானே.. :(

Tuesday, September 16, 2008

கண்கள்..




என் கண்கள் உன்னை எனக்கு அறிமுகப் படுத்தியது.
உன் கண்கள் என்னையே எனக்கு அறிமுகப் படுத்தியது.

Tuesday, September 2, 2008

எது புனிதம்?

என்னவள் என்னை மறந்தும் நான் மறக்காமல் இருப்பதா
இல்லை
'என்னை மறந்து விடு' என்று சொல்லிய அவளை மதித்து
அவளை மறந்து விடுவதா??

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...