Sunday, January 4, 2009

பிரிவதழகு

மேகம் வானைப் பிரிவதழகு,
மழை வருவதென்றால்..
உதடுகள் ஒன்றை ஒன்று பிரிவதழகு,
புன்னகை மலர்வதென்றால்..
பேனாவை மை பிரிவதழகு,
கவிதை உருவாவதென்றால்..
கண் இமைகள் பிரிவதழகு,
காட்சி தெரிவதென்றால்..
ரோஜா தன் செடியை பிரிவதழகு,
பெண்ணே உன் கூந்தலைச் சேர்வதென்றால்..
என் கை விரல்கள் பிரிவதழகு,
உன் விரல்கள் கோர்ப்பதென்றால்..
உன் வீட்டை நீ பிரிவதழகு,
என் வீட்டில் நீ வாழ்வதென்றால்..

1 comment:

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...