Sunday, June 22, 2008

Dasavathaaram..

தசாவதாரம் - பெயர்க்காரணம்
1. மச்சாவதாரம்- ரெங்கராஜ நம்பி

மச்சம் என்றால் மீன். கடலில் வாழும் மீன் போல், நம்பி சிலையோடு கடலில் வீசப்படுவதால்


2. கூர்மாவதாரம்-புஷ்

கூர்மாவதாரத்தில் ஆமை உருவமெடுத்து பாற்கடலைக் கடந்து அமுதை எடுத்து தேவ்- அசுரன் போருக்கு காரணமாவார், இப்போது நடக்கும் போர்களுக்கு புஷ் காரணம்...!!

3.வராஹ அவதாரம்:கிருஷ்ணவேணி பாட்டி

முகுந்தா பாடலின் போது பாட்டி வராஹ அவதாரத்தை நிழற்படத்தில் செய்து காட்டுவார். அந்த அவதாரத்தில் பூமி கடலில் மறையும், வராஹமாய் வந்து காப்பாராம். அது போல் வைரஸ் கிருமியைப் பாட்டி மறைக்கிறாராம்

4.நரசிம்ம அவதாரம்:சிங்கன் நரஹசி(Shingen Narahashi)

பேருலயே நரசிங்அம் வந்துருச்சுல்ல. மேலும் நரசிம்மர் அசுரனை கொன்றதோடு பிரகலாதனுக்கு உபதேசம் செய்வார், அதேபோல் இவரும் கராத்தே டீச்சர், வில்லனைக்கொல்ல நினைப்பார், அசுரனை வெறும் கையால் கொல்லுவார்.

5.வாமன அவதாரம்: கலிஃபுல்லா

இந்த அவதாரத்தில் வாமனர் தன் உயரமான விசுவரூபத்தைக் காட்டுவார், இங்கயும் 8 அடி உயர விசுவரூப்மாய்

6.பரசுராம அவதாரம்:நம்ம வில்லன் ஃப்ள்ட்சர்

பரசுராம அவதாரம் முழுதும் அரசர்களைப் போட்டுத்தள்ளுவாராம். அது மாதிரி நம்ம ஃபிளெட்சரும் எல்லாரையும்.

7.ராம அவதாரம்:அவதார் சிங்

ராமர் ஏக பத்தினி விரதர். அது மாதிரி நம்ம அவதார் சிங்கும்.அவர் வைஃபை லவ் பண்ண்றாருங்கோ

8.பலராம அவதாரம்: பலராம் நாயுடு

பேர் ஒன்றே போதும்.

9.கிருஷ்ண அவதாரம்:வின்சென்ட் பூவராகன்

கிருஷ்ணர் அவதாரம் கருப்பா...! நம்ம வின்சென்ட்டும் கருப்பு..
திரௌபதையைக் காக்க கிருஷ் தொன்றியதைப் போல், அசினைக் காக்க வின்ஸ் தோன்றாராருல்ல.


10. கல்கி அவதாரம்:

அவர் தாங்க பேலன்ஸ்.. நம்ம ஹீரோ கேரக்டர்.

No comments:

Post a Comment

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...