Friday, October 24, 2008

புத்தகம்


தலை குனிந்து உன்னைப் படித்தேன்
இன்று பலர் என்னை தலை நிமிர்ந்து பார்க்கச் செய்தாய்

Tuesday, October 21, 2008

எதிர் மறை..

வெற்றியும் தோல்வியே..
தோல்வியும் வெற்றியே..
இரண்டையும் நம் அன்பானவர்கள் மீது பெரும் பொழுது..

வாழ்க்கை சக்கரம்.. ;-)

அழகில்லயேல் கற்பனை இல்லை
கற்பனை இல்லையேல் கவிதை இல்லை
கவிதை இல்லையேல் காதல் இல்லை
காதல் இல்லையேல் கண்ணீர் இல்லை
கண்ணீர் இல்லையேல் கவலை இல்லை
கவலை இல்லையேல் துன்பம் இல்லை
துன்பம் இல்லையேல் தோல்வி இல்லை
தோல்வி இல்லாத வாழ்க்கை அழகில்லை....

அழகில்லயேல் கற்பனை இல்லை
கற்பனை இல்லையேல் கவிதை இல்லை
.............................................
.............................................

Monday, October 20, 2008

கிறுக்கல்கள்..



நீண்ட நாட்களுக்குப் பிறகு சில கிறுக்கல்கள்.. கிறுக்குவது நான் என்றாலும் கிறுக்கப்பட்டவை என் நெஞ்சம். ஆம்.. காலம் என்னும் எழுதுகோல் என் வாழ்க்கை என்னும் ஏட்டில் இன்பம், துன்பம், கவலை, கண்ணீர், விருப்பு, வெறுப்பு என பற்பல வண்ணங்களால் பல ஓவியத்தை தீட்டி விட்டது. இதில் நான் தீட்டுவதற்கு ஒன்றுமே இல்லை என்று சொல்வதை விட நான் தீட்டியவை, தீட்ட நினைத்தவை அனைத்தையும் சூழ்நிலை என்ற வெள்ளம் அடித்துச் செல்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் .. என்று முடியும் இந்த போர்.. சுதந்திரம் கிடைத்தது நம் நாட்டுக்கு என்றால் நம் சிந்தனைக்கு ஏன் தரவில்லை இன்னும் விடுதலை. சிந்தித்தாலும் அதை செயல் படுத்த விடாத சமூகம் ஒரு புறம், சமூகம் விட்டாலும் காலம் ஒரு புறம்.. இப்படி இரு கைகளும் விலங்கால் கட்டப் பட்டு வாழ்க்கை எனும் சிறையினில் சிறகடிப்பது எதனை நாளோ???

Saturday, October 18, 2008

தோழா..

கவலை இல்லாமல் வாழ்ந்தது
கருவறையில் மட்டும் அல்ல...
கல்லூரியிலும்தான்..
படிக்காமல் பட்டம் பெற்றது
அண்ணா மட்டும் அல்ல..
நாங்களும்தான்..
அன்பும் அக்கறையும் கண்டது
சகோதரனிடம் மட்டும் அல்ல
சக தோழனிமும்கூட..
கண்ணீர் வருகிறது,
இரத்தம் வந்தால் அல்ல..
நீண்ட நாளுக்குப் பின்
உன் சத்தம் வந்தால்..

Friday, October 10, 2008

ஏப்ரல் 1

உன் காதலை இன்று ஏனடி சொன்னாய்..
முட்டாள்கள் தினத்தை எண்ணி அழுவதா?
இன்றாவது சொன்னாயே என்றெண்ணி சிரிப்பதா?

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...