
நீண்ட நாட்களுக்குப் பிறகு சில கிறுக்கல்கள்.. கிறுக்குவது நான் என்றாலும் கிறுக்கப்பட்டவை என் நெஞ்சம். ஆம்.. காலம் என்னும் எழுதுகோல் என் வாழ்க்கை என்னும் ஏட்டில் இன்பம், துன்பம், கவலை, கண்ணீர், விருப்பு, வெறுப்பு என பற்பல வண்ணங்களால் பல ஓவியத்தை தீட்டி விட்டது. இதில் நான் தீட்டுவதற்கு ஒன்றுமே இல்லை என்று சொல்வதை விட நான் தீட்டியவை, தீட்ட நினைத்தவை அனைத்தையும் சூழ்நிலை என்ற வெள்ளம் அடித்துச் செல்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் .. என்று முடியும் இந்த போர்.. சுதந்திரம் கிடைத்தது நம் நாட்டுக்கு என்றால் நம் சிந்தனைக்கு ஏன் தரவில்லை இன்னும் விடுதலை. சிந்தித்தாலும் அதை செயல் படுத்த விடாத சமூகம் ஒரு புறம், சமூகம் விட்டாலும் காலம் ஒரு புறம்.. இப்படி இரு கைகளும் விலங்கால் கட்டப் பட்டு வாழ்க்கை எனும் சிறையினில் சிறகடிப்பது எதனை நாளோ???
No comments:
Post a Comment