Sunday, December 25, 2011

விழியின் மழை


கருப்பு வெள்ளை மேகங்கள் நடுவே
தோன்றும் அந்த விழியின் மழை

பள்ளம் நிறைய திரண்டு நிற்கும்
இமைகள் என்னும் அணைகள் தாண்டும்
கன்னம் எனும் நிலத்தில் பாய்ந்து
உதட்டில் இறங்கும் உணர்வின் வெள்ளம்

ஒவ்வொரு மழையும் கதை சொல்லும்
மனதின் பாரம்தனை அடித்துச் சென்று
கவலை எல்லாம் அது வெல்லும்


நாவில் கலந்து உயிருள் கலக்கும்
ஏங்கும் மனதின் தாகம் தீர்க்கும்

இன்பம் துன்பம் இரண்டிற்கும்
கண்ணீர் மட்டும் ஒன்றுதான்

எனவே இரண்டையும் ஒன்றாக
கருதி வாழ்வில் முன்னேறு,
என்னும் உயர்ந்த கருத்தினை
உணர்த்தி காற்றில் கரைந்திடும்.

Saturday, September 3, 2011

இன்பத்தமிழ்


நமக்குள் மழை பெய்த போதும்
ஒரு வெப்பம் தான் உண்டாச்சு

மழையில் நனைகயிலே
இரு சிற்பமும் ஒன்றாச்சு

மழை பெய்து முடிக்கையிலே
இந்த உலகே அற்பமாச்சு.

Thursday, February 3, 2011

நிலாச்சோறு

நிலவை நம்பியில்லை,
உன் அன்பை நம்பி.
ஏன் எனில்,
நிலவும் ஏமாற்றும்
அமாவாசை அன்று.


இணைப்பு
___________
இறைவா,
உன் படைக்கும் திறன்
காணாமல் போய் விட்டதா?
தாயை பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறாய்..

Friday, January 14, 2011

அழகு


 

வானின் அழகு
மழையால் மண்ணை
செழிப்பக்கும் போது மட்டும்..
வானவில்லில்..

மனிதனின் அழகு
பிறருக்கு உதவி
செய்யும் போது மட்டும்..
உதவி பெற்றவனின் சிரிப்பில்..

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...