Wednesday, March 14, 2012

போ நீ போ..

 Inspired from "போ நீ போ" song in the movie '3'. Read it in the original song's rhythm.

போ நீ போ..
போ நீ போ..

ஒரு வார்த்தை சொல் போதும்
உயிர் உருகும் அன்பே போ

மௌனத்தினால் கொள்ளாதே
உயிர் கருகும் அன்பே போ

நான் கிறுக்கும் வார்த்தை எல்லாம்
உன் பெயர்தான் அன்பே போ

நான் கேட்கும் சத்தமெல்லாம்
உன் குரல்தான் அன்பே போ

என் கண்ணீரில் உன் நெஞ்சம்
கரையாதா அன்பே போ

உன் செவ்விதழ்கள் எனைப் பார்த்து
சிரிக்காதா அன்பே போ

உன் கண்ணிமைகள் எனைக் கொஞ்சம்
அழைக்காதா அன்பே போ


உனக்காக ஒரு ஜென்மம்
போதாதா அன்பே போ

உனக்காக உயிர் வாழும்
ஒரு ஜீவன் இங்கேதான்

எதற்காக பிடிவாதம்
ஏமாற்றம் அன்பே போ

காலமெல்லாம் கவி பாடும்
என் காதல் அன்பே போ


காலடியில் நீ கசக்கி விட்டாய்
கருணை இல்லா அன்பே போ
......
......

இதுவரை சொல்லிய வார்த்தைகள் யாவும்
உன் சிறு செவிகளில் விழவில்லையா

சொன்னவை எல்லாம் செவிதனில் கேட்டும்
சிறை விட்டு பறக்க மனமில்லையா
.....
.....
ஏழு ஜென்மமும் உன் காதலில்லா
ஏழையா நான் இங்கே அன்பே போ


போ நீ போ.................

2 comments:

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...