Thursday, September 20, 2012

முள்ளில் ரோஜா

வீட்டின் எதிர்ப்பைத் தாண்டி
கால் கடுக்க ஓடி வந்து
மேலும் ஒரு அடி கூட
எடுத்து வைக்க முடியாமல்
இளைப்பாற மரத்தடியில்
நாம் ஒதுங்கி நின்ற போது..
"எனக்காக நீ
உனக்காக நான்
நாம் சேர்ந்து வாழ்வோம்
ஓராயிரம் காலம் "
என்றுன் கண் சொன்ன வார்த்தை
என்னுள் தருமடி
இரு மடங்கு தெம்பு..

வா.. மீண்டும் ஓடலாம்
நம் வாழ்க்கைப் பயணத்தில்,
நீ என்னைச் சுமந்தோ
நான் உன்னைச் சுமந்தோ அல்ல;
நாம் இருவரும்
நம் காதலைச் சுமந்து..

Dedicated to . . . . . .   :)





8 comments:

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...