Saturday, December 8, 2012

கிளிப்பிள்ளை

உன்னைக் காண்பேனென்று நான்
நினைக்கவில்லை;
உன் மேல் வந்தக் காதலைத்
தடுக்கவில்லை;
அதைப் பொத்தி வைக்கப்
பொறுமை இல்லை;
அதை உன்னிடம் சொல்லத்
தைரியமும் இல்லை;
இதை நான்,
சொல்லாமல் புரிஞ்சுக்கோடி
என் கிளிப்பிள்ளை..

Wednesday, October 31, 2012

பள்ளி

நான்கு வயதில்
தொடங்கிய உறவு;
பதினான்கு வருடம்
 தொடர்ந்த உறவு;
 
தனியாய் சாப்பிடக்
கற்றது உன்னோடு;
இன்றும் நினைவில்
அது என் கண்ணோடு;

வாத்தியார் அடித்து நான்
அழுததும் நீ கண்டாய்;
கண்ணீர் பிதுங்க நான்
சிரித்ததும் நீ கண்டாய்;

நண்பன் என்ற சொல்லை
அறிமுகம் செய்ததும் நீதான்;
என் முதற் காதல்
அரும்பிய இடம் நீதான்;

நான் வாழக் காரணம்
நீ தந்த ஞானமே;
நீ கொடுத்த கல்வியால்
என்றும் இல்லை ஊனமே;

உன்னோடு வாழ்ந்த காலம்
என்றும் என் பொற்காலம்;
உன்னால் தான் நானிங்கு
வாழ்கிறேன் ஓர் நற்காலம்.

DEDICATING THIS TO MY SCHOOL - SRI KANNA MATRICULATION HR.SEC.SCHOOL, PULIANGUDI-627855

Friday, September 28, 2012

நாலு ரூபாய் லட்சாதிபதி


நாலு ரூபாய் டிக்கெட் வாங்கி
லோக்கல் பஸ்ஸில் வந்தாலும்
அப்பா பஸ் வந்துருச்சுனு
குழந்தை சொல்லும் அந்த நொடி
அந்த பஸ்ஸுக்கே சொந்தக்காரன்
அவன் ஆகிறான் அதன் அன்பால்.

Dedicated to All my DBZ friends who have become father by this time :D

Thursday, September 20, 2012

முள்ளில் ரோஜா

வீட்டின் எதிர்ப்பைத் தாண்டி
கால் கடுக்க ஓடி வந்து
மேலும் ஒரு அடி கூட
எடுத்து வைக்க முடியாமல்
இளைப்பாற மரத்தடியில்
நாம் ஒதுங்கி நின்ற போது..
"எனக்காக நீ
உனக்காக நான்
நாம் சேர்ந்து வாழ்வோம்
ஓராயிரம் காலம் "
என்றுன் கண் சொன்ன வார்த்தை
என்னுள் தருமடி
இரு மடங்கு தெம்பு..

வா.. மீண்டும் ஓடலாம்
நம் வாழ்க்கைப் பயணத்தில்,
நீ என்னைச் சுமந்தோ
நான் உன்னைச் சுமந்தோ அல்ல;
நாம் இருவரும்
நம் காதலைச் சுமந்து..

Dedicated to . . . . . .   :)





Tuesday, July 24, 2012

பிடித்த பாடல் வரிகளில் சில..

****
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாய் அன்று வேறொன்று எது??

உலகத்தில் பந்தங்களெல்லாம் நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்தி சென்றாயே

இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற

நெஞ்சிலே நடக்க வைப்பா
நிலாவ பிடிக்க வைப்பா

பேதை போல் அவள் இருப்பாள்
மேதையாய் உன்னை வளர்ப்பாள்******

Hats off to Raam Movie: "Aarariraro" song and Vyabari Movie:'Aasai patta ellathayum" song
---------------------------------------------------------------------------


*******
உன்னைக் கேளாய் நீ யாரு
உன்னைக் கேளாய் நீ யாரு
உண்மை கண்டார் யார் யாரு கூறாய்

உள்ளக் கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகுமே சீராய்

அங்கங்கே மேடும் உண்டு
அங்கங்கே பள்ளம் உண்டு
அதை வெல்லும் உள்ளம் செல்லும் நேராய்

சோகங்கள் பொய்யடா
அதை நீக்கி வையடா
மனம் என்ற வீட்டை நீ
தினம் சுத்தம் செய்யடா

நீ போகும் பாதையில்
பொய் இருளை கொல்லடா
உண்மை ஜோதி ஏற்றி நீ
உலகை வெல்லடா

கங்கையில் நீராடினால்
பாவங்கள் போகலாம்
ஆசைகள் போகுமா??
உயிரெல்லாம் நதியைப் போல
ஓயாமல் எங்கும் பாய
இறைவன் அவன் கடல் என்று பயணம் போகும்

நத்தைக்குள்  முத்து போல்
மரத்துக்குள் வித்து போல்
உன் வாழ்க்கை என்பதும்
உள்ளத்தில் உள்ளதடா..*******
-------------------------------------------------------------------------------------------------
*****நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான்தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுபோல் வேறெங்கும் சொர்க்கம் இல்லை
உயிரே வா!!!! *****

--------------------------------------------------------------------------


*****இது நீரின் தோளில் கை போடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவை இல்லையே... *****

--------------------------------------------------------------------------

காட்டு மல்லி பூத்திருக்கு
காதலா காதலா
வந்து வந்து ஓடிப் போகும்
வண்டுக்கென்ன காய்ச்சலா
--------------------------------------------------------------------------

எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க
அழுகை வந்தது

எந்தன் சோகம் உன்னை தாக்கும்
என்றென்னும் போது வந்த
அழுகை நின்றது
--------------------------------------------------------------------------

நாளை நாளை நாளை எண்ணி
இன்றை இழக்காதே நீ இன்றை இழக்காதே

இன்றே உழைத்தால் நாளை உனக்கு
அதை நீ மறக்காதே
நீ
அதை நீ மறக்காதே

*****நேற்று நடந்த காயத்தை எண்ணி
நியாயத்தை விடலாமா
நியாயம் நியாயம் அவனே அறிவான்
அதை நீ அவனிடம் விட்டுச்செல்..*****

--------------------------------------------------------------------------
*******"நிலவின் பின் புறமாய் நீதான் இருந்தாயா?
குயிலின் குரல் வளையில் நீதான் இருந்தாயா?
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்?
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்?
இந்த உலகின் அழகெங்கும் நீதானா ஒளிந்தோடினாய்?"*****

--------------------------------------------------------------------------
உசிர் என்னோடு இருக்கையிலே
நீயும் மண்ணோடு போவதெங்கே
அட உன் சேவையில் நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூட குழம்பும் ஐயா..
--------------------------------------------------------------------------


NOTE: The ones written between ******* are much impressed ones.

Friday, June 1, 2012

செம்மொழி - எங்கள் தமிழ் மொழி.

தமிழில் எழுத ஆசைதான்
என் தாய்த் தமிழில் எழுத ஆசைதான்;
பட்டப் படிப்பு அனைத்தையும்
தாய்த் தமிழில் படிக்க ஆசைதான்

தாய் மொழியில் அறிவைப் பெற்று
தலை நிமிர்ந்து வாழ்வதை விட்டு
அந்நிய மொழியால் அவஸ்தைப் பட்டு
வாழ்கிறோம் நித்தம் அறிவும் கெட்டு


ஈராறு உயிர்கள் தமிழில் இருக்க
என் உயிர் முழுதும் அதன் மேல் இருக்கும்;
பதினெட்டு மெய்கள் உயிரோடு சேரும்
என் மெய் முழுதும் அதை போற்றிப் பாடும்;

வளைவு நெளிவு உள்ளதால்
தமிழும் பெண்ணும் ஒன்றுதான்;
அதனைப் படித்து உயர்கிறேன்
வாழ்நாள் என்றும் நன்றுதான்.

வள்ளுவர் தந்த திருக்குறள்,
பாரதி கண்ட புதுமைகள்,
அனைத்தும் தமிழில் இருந்திட
எவரும் உண்டோ படித்திட??

Friday, May 4, 2012

என்றும் என்னவள் (?)

நீ கோபம் கொள்ளும் நேரம்
என் இமைகள் கொண்டது பாரம்;
நீ கோபம் ஆற்றும் நேரம்
நம் இதழ்கள் ஆனது ஈரம்;

உன் காதருகில் மெல்ல
முணுமுணுக்க ஆசை,
அதைக் கேட்டு உன் சிணுங்கல்
புல்லாங்குழல் ஓசை;

நீ தந்த அன்புக்கொரு நன்றி,
நான் எங்கு போக
இனி நீ இன்றி??

Thursday, March 29, 2012

கனாக் காலம்

வகுப்பின் முதல்நாள் காலை;
நம்பிக்கையுடன் வைத்தோம்
உள்ளே எங்கள் காலை.

மனதின் ஆவல்
இதயத் துடிப்பினில் கேட்கும்;
ஒவ்வொரு கண்ணும்,
புதிராய் மின்னும்.

புதுப்புது முகங்கள்,
அறிமுகம் மெதுவாய்;
அதிலுள்ள தயக்கம்,
அதை ஆக்கிடும் அழகாய்.
புதுப்புது உறவுகள்
தோழனாய் தோழியாய்.

கடமை ஏதும் இல்லை;
கவலை ஏதும் இல்லை;
விடுதி உணவு என்ற
ஒன்றே ரொம்ப தொல்லை;

ஆசிரியரின் அறிவுரை
எங்க மூளைக்கு எட்டல;
ஊர் முழுக்க சுற்றிட
மீதி நேரம் பத்தல;


இரவுக்கு காவலாய்
விடிய விடிய அரட்டைகள்;
நிலவு கண்டு வியக்கும்
எங்கள் இந்தத் திறமைகள்;

விடிந்தபின் சூரியனை
எழுப்பிவிட்டு தூங்குவோம்;
கனவில் கன்னி தேவதைகள்
கண்டு தூக்கம் தொலைத்திடுவோம்.

கற்றது நாங்க கள்ளத்தனம் இல்ல
கல்லூரி பரிட்சையில் தோல்வியும் இல்ல.

நாங்க ஒரு வரி படிச்சு
ஒன்பது பக்கம் எழுதி

வாத்தி ஒரு மணி நேரத்தில்
எண்பது தாள் திருத்தி

நாலு சுவருக்குள் உருவாகும்
பட்டதாரி நாங்கள்,
நாட்டின் எதிர்காலத் தூண்கள்.

Wednesday, March 14, 2012

போ நீ போ..

 Inspired from "போ நீ போ" song in the movie '3'. Read it in the original song's rhythm.

போ நீ போ..
போ நீ போ..

ஒரு வார்த்தை சொல் போதும்
உயிர் உருகும் அன்பே போ

மௌனத்தினால் கொள்ளாதே
உயிர் கருகும் அன்பே போ

நான் கிறுக்கும் வார்த்தை எல்லாம்
உன் பெயர்தான் அன்பே போ

நான் கேட்கும் சத்தமெல்லாம்
உன் குரல்தான் அன்பே போ

என் கண்ணீரில் உன் நெஞ்சம்
கரையாதா அன்பே போ

உன் செவ்விதழ்கள் எனைப் பார்த்து
சிரிக்காதா அன்பே போ

உன் கண்ணிமைகள் எனைக் கொஞ்சம்
அழைக்காதா அன்பே போ


உனக்காக ஒரு ஜென்மம்
போதாதா அன்பே போ

உனக்காக உயிர் வாழும்
ஒரு ஜீவன் இங்கேதான்

எதற்காக பிடிவாதம்
ஏமாற்றம் அன்பே போ

காலமெல்லாம் கவி பாடும்
என் காதல் அன்பே போ


காலடியில் நீ கசக்கி விட்டாய்
கருணை இல்லா அன்பே போ
......
......

இதுவரை சொல்லிய வார்த்தைகள் யாவும்
உன் சிறு செவிகளில் விழவில்லையா

சொன்னவை எல்லாம் செவிதனில் கேட்டும்
சிறை விட்டு பறக்க மனமில்லையா
.....
.....
ஏழு ஜென்மமும் உன் காதலில்லா
ஏழையா நான் இங்கே அன்பே போ


போ நீ போ.................

Tuesday, February 7, 2012

பெருமிதம் :)

கரியாய் போனாலும் கரைவது இல்லை
புதைந்து போனாலும் சிதைவது இல்லை
பொறுமை என்னும் ஆயுதம் கொண்டு
வைரமாய் வளர்வோம் வைராக்கியம் கொண்டு

அழிவே இல்லை ஆத்மாவிற்கு
இழிவே இல்லை இந்தியனுக்கு..
 
காற்றாய் பறப்போம் கவலை வேண்டாம்
மேகத்தை முட்டி மழையாய் வருவோம்

உயிரை விடவும் மானம் பெரிதே
என்று வாழும் உயிர்கள் இங்கே
தெய்வம், கோயில் ஆயிரம் உண்டு
உயர்ந்து நிற்கும் மலைகள் உண்டு
அதில் பாய்ந்தோடும் நதிகள் உண்டு

மழை தரும் மரங்கள் கண்டு
அதில் கூடு கட்டும் தேனீ வண்டு..

கண்ணைப் பார்த்து பேசாப் பெண்கள்
கண்ணை அன்றி பார்க்கா ஆண்கள்

கர்ப்பின் அர்த்தம் கருவில் கற்றோம்
ரத்த உடையில்தான் உலகை பார்த்தோம்

பொம்மைக்கும் உடை அணியும்
பெருமை வாய்ந்த இனம்தான் நாங்கள்..

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...